கலையிழந்த தீபாவளி ! வெறிச்சோடிய உஸ்மான், ரங்கநாதன் தெருக்கள் !

கலையிழந்த தீபாவளி ! வெறிச்சோடிய உஸ்மான், ரங்கநாதன் தெருக்கள் !

கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீபாவளி என்றாலே துணிக்கடை, நகைக்கடை, இனிப்புக் கடை மற்றும் நடைமேடையில் அமைந்துள்ள சிறிய கடைகளிலும் கூட்டம் அலைமோதும். சென்னையை பொறுத்தவரை வண்ணாரப்பேட்டை, ராயபுரம், புரசைவாக்கம், தி.நகர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில்தான் துணிக்கடல்கள் இருக்கின்றன.

tnagar

மற்ற ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ஆரம்பத்தில் சூடுபிடித்த நிலையில் கடந்த சில நாட்களாக டல் அடிப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2 தினங்களாக தி.நகர் வெறிச்சோடி காணப்படுகிறது. சாதரண நாட்களிலேயே கூட்டம் அலைமோதும் ரங்கநாதன் தெரு கூட மக்கள் கூட்டம் இல்லை. இதற்குக் காரணம் ஆன்லைன் வர்த்தகம்தான் காரணம் என வியாபாரிகள் குற்றம்சாட்டினர். ஆன்லைனில் பொருட்கள் அதிக சலுகைகள் தருவதால் மக்கள் நேரில் வருவதை கைவிட்டுவிட்டதாக கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் மக்களிடம் பண புழக்கம் இல்லாததும், மக்களின் வாங்கும் திறன் குறைந்ததும் கூட்டம் குறைவதற்கு ஒரு காரணமாக சிலர் தெரிவிக்கின்றனர்.

tnagar

இதுமட்டுமல்ல பிரபல துணிக் கடைகள் தாம்பரம், வேளச்சேரி என புறநகரில் கிளைகளை தொடங்கிவிட்டதால் அங்குள்ள மக்களும் இங்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக தி.நகரில் இருக்கும் பெரிய பிரச்சனை வாகன நிறுத்தும் இடம்தான். ஒரு சில பிரபல கடைகள் பார்க்கி வைத்திருந்தாலும், தீபாவளி சமயங்களில் நிரம்பி வழிவதால் வாகனங்களை எங்காவது சாலையோரம் நிறுத்திவிட்டு வரவேண்டும். துணி வாங்க வருபவர்கள் வாகனத்தை யாராவது திருடிவிடுவார்களா அல்லது நோ பார்க்கிங் எனக்கூறி போலீசார் எடுத்து செல்வார்களா என்ற மனநிலையிலேயே கடைக்க வருகின்றனர். தீபாவளி நேரங்களில் காவல்துறையினருக்கு சவாலாக இருக்கும் மக்கள் கூட்டம் இந்த முறை குறைந்த அளவே இருப்பதாக போலிசார் கூறுகின்றனர்.