கலைத்துறையில் மிக சிறந்த பங்களிப்புக்கான விருதை பெற்ற பரியேறும் பெருமாள் இயக்குநர்!!

 

கலைத்துறையில் மிக சிறந்த பங்களிப்புக்கான விருதை பெற்ற பரியேறும் பெருமாள் இயக்குநர்!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்களுடைய குரலிலேயே பதிவு செய்த இயக்குநர் மாரி செல்வராஜ்

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் மூலம் இலக்கிய உலகத்தில் அறிமுகமாகி, பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்களுடைய குரலிலேயே பதிவு செய்த இயக்குநர் மாரி செல்வராஜ்.

pariyerum perumal

இதுவரை வெளிவந்த சாதிய பிரிவினைகள், கொடுமைகளுக்கு எதிரான படங்களிலிருந்து பல வகைகளில் வேறுபட்டிருக்கும் திரைப்படமான பரியேறும் பெருமாள், சாதி குறித்த உரையாடல்களை சக மனிதர்களிடம் தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டுள்ளது. மாரி செல்வராஜ் மட்டுமல்ல… தமிழ்சினிமாவே மார்தட்டி கொள்ளும் படைப்பான பரியேறும் பெருமாள், மிகுந்த கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

pariyerum perumal

அமெரிக்காவின் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’-ல் ‘பரியேறும் பெருமாள்’ திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் ஆண்டுதோறும் கலைத்துறையில் மிக சிறந்த பங்களிப்புக்காக  வழங்கபடும் “சமஸ்தி 2019” விருது, பரியேறும்பெருமாள் திரைப்படத்திற்காக அதனுடைய இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “மாராத்திய கவிஞரும்  மூத்த சமூக செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ திரு. நாம்தியோ தசால் அவர்களின் பெயரால் மும்பையில் ஆண்டுதோறும் கலைத்துறையில் மிக சிறந்த பங்களிப்புக்காக  வழங்கபடும் “சமஸ்தி 2019” விருதை பரியேறும்பெருமாள்-காக மரியாதைக்குரிய இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களிடமிருந்து பெற்றுகொண்டது பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. மும்பை யுனிவர்சிட்டியில் சிலையாக கருப்பியை எழுப்பி அதற்கு முன்னால் நின்று இந்த விருதை நான் பெற்றுகொண்டபோது இயக்குநர் அனுராக் காஷ்யப் “அங்கே பாருங்கள் உங்கள் கருப்பியும் இந்த மேடையில் நம்மோடு இருக்கிறது மாரி உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்”  என்று சொல்லி தன் பெரிய கண்களை உருட்டி கட்டிப்பிடித்த அந்த நொடியில் அடைந்த உணர்வு மகத்தான தருனமாக இருந்தது. அத்தனைக்கும் காரணமான என் செல்ல கருப்பிக்கே இவ்விருதை பரியேறும்பெருமாள் டீம் சார்பாக சமர்பிக்கிறேன்…லவ் யூ கருப்பி!!” என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.