கலைஞர் எதிர்ப்பும் ராஜபக்சே ஆதரவும்: தமிழின எதிரியுடன் உறவாடும் சு.சாமியின் திட்டம் இதுதான்?

 

கலைஞர் எதிர்ப்பும் ராஜபக்சே ஆதரவும்: தமிழின எதிரியுடன் உறவாடும் சு.சாமியின் திட்டம் இதுதான்?

டெல்லி: முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் சந்தித்தது அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் உதவியோடு பல அப்பாவி தமிழ் மக்களின் உயிரை பறித்தவர் ராஜபக்சே. அவர் மீது தமிழ் மக்களுக்கு தீராத வெறுப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென டெல்லி வந்த ராஜபக்சே, பாஜக மூத்த தலைவர் சு.சாமியை சந்தித்தார். ராஜபக்சேவுக்கு சு.சாமி உற்சாக வரவேற்பளித்து கௌரவித்தார். கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கக்கோரிய போது கடும் எதிர்ப்பை தெரிவித்த சு.சாமி, ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் நலனுக்காக பாடுபடும் எந்த தலைவர்களையும் சு.சாமி ஆதரிக்க தயாராக இல்லை.

தற்போது இவர்களின் சந்திப்பு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 7 பேர் விடுதலைக்கு தடையை ஏற்படுத்தும் சதி திட்டம் என கூறப்படுகிறது. ராஜபக்சே சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சு.சாமி, 7 பேர் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். சு.சாமி தமிழ் மக்கள் மீது வெறுப்பை உமிழக்கூடியவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கி என கூறினார். தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் சு.சாமி, 7 பேர் விடுதலைக்கு இடையூறாக இருப்பார் என தெரிகிறது.