‘கலைஞர்களை பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதை ஏற்கமுடியாது’: இயக்குநர் பாரதிராஜா வேதனை!

 

‘கலைஞர்களை பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதை  ஏற்கமுடியாது’: இயக்குநர்  பாரதிராஜா வேதனை!

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய 49 பிரபலங்கள்  கடிதம் எழுதினர்.

பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டதற்கு இயக்குநர் பாரதிராஜா  கண்டனம் தெரிவித்துள்ளார். 

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய 49 பிரபலங்கள்  கடிதம் எழுதினர். அதில், ‘அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசத்துரோகி என்று முத்திரை  குத்தப்படுவதை ஏற்க முடியாது. நாட்டின் ஒரு குடிமகன்  தனது சொந்த நாட்டிலேயே  உயிர் பயத்தில்  வாழும் நிலை ஏற்படக் கூடாது’ என்று குறிப்பிட்டு இருந்தனர். தற்போது பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீதும் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அனுராக் காஷ்யப், கொங்கனா சென், அபர்ணா சென், ஆகியோரும் உள்ளனர். 

case

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திரையுலகினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர்  பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார். அதில், அரசை விமர்சிப்பதால் ஒருவரை தேச விரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதையும், அதற்காக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்வதையும் ஏற்கமுடியாது. திரைக்கலைஞர்கள்  தங்கள் படங்களின் மூலமாக தான் கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்றும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதையும் ஏற்கமுடியாது’ என்றார்.

barathiraja

தொடர்ந்து பேசியுள்ள அவர், மாற்று கருத்துடையவர்களை பொய் வழக்குகளை ஏவி ஊமையாக்குவது ஏற்புடையது அல்ல. அதனால் 49 பிரபலங்கள் மீதும் பதிவு செய்துள்ள  தேசத்துரோக வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்’ என்றார்.