கலைஞரை போல ஸ்டாலின் ஒரு ராஜ தந்திரி- திருமா புகழாரம்

 

கலைஞரை போல ஸ்டாலின் ஒரு ராஜ தந்திரி- திருமா புகழாரம்

கலைஞரை போல ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிறுப்பித்துவிட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

கலைஞரை போல ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிறுப்பித்துவிட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “திருமாவளவன் தேர்தலில் வெற்றி பெற்றால் அது கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என பிரச்சாரத்தில் சொன்னவர் ஸ்டாலின். அண்ணா இல்லாத காலத்தில், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்றார் கலைஞர். கலைஞர் இல்லாத போது ,கலைஞர் வழியில் கடுமையாக உழைப்போம் என்றார் ஸ்டாலின். கலைஞரை போல ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிரூப்பித்துவிட்டார்.

கூட்டணியை அமைத்திலேயே கலைஞரின் மகன் என்பதை நிரூபித்து விட்டார். ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்கிற முழக்கம் ஆபத்தானது. நமது நாட்டின் பண்பை குலைக்கும். பிற மொழி, பிற மதம் இருக்க கூடாது என்பது தான் சாதாரண மக்களின் நோக்கம்.  கலைஞரின் திட்டத்தை பார்க்கும் போது அவரின் தொலைநோக்கு பார்வை தெரிகிறது. மாநில சுயஆட்சியை பற்றிய புரிதல் அவரிடம் இருந்தது. இந்தி திணிப்பை எதிர்த்து போராடியதன் காரணமாக தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கிறது.
 கலாச்சார ஊடுருவல், மொழி ஊடுருவலை தொடர்ந்து, தமிழகத்தில் பிற மொழி பேசுபவர்களின் என்ணிக்கை அதிகமாகியுள்ளனர்.
 வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு தமிழகத்தில் அதிகமாகியுள்ளது. அனைத்து அரசு வேலைகளிலும் தமிழர் உரிமை பரிப்போகியுள்ளது” எனக் கூறினார்.