கலைஞருக்கு சிலை வைக்கப்போரோம்… வசூல் வேட்டையாடிய தி.மு.க மா.செ?

கலைஞருக்கு சிலை வைக்கப்போரோம்… வசூல் வேட்டையாடிய தி.மு.க மா.செ?

நீலகிரி மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் தி.மு.க-வினரிடம் கருணாநிதிக்கு சிலை வைக்கப் போகிறோம் ரூ.10 ஆயிரம் கொடு என்று மாவட்டச் செயலாளர் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

kalaignar statue

ஊராட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி நீலகிரி மாவட்ட தி.மு.க வேட்பாளர் பட்டியலை மாவட்ட செயலாளர் முபாரக் சமீபத்தில் அறிவித்தார். எதன் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடந்தது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. யார் எல்லாம் மாவட்டச் செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தார்களோ அவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

money

உதகையில் மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதிக்கு சிலை வைக்கப்போவதாக கூறி இந்த 10 ஆயிரத்தை அவர் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மாவட்டம் முழுக்க எத்தனை பதவிகள் உள்ளன, எத்தனை பேரிடம் ரூ.10 ஆயிரம் வாங்கினார் என்று கணக்கிட்டுப் பார்த்தால் பல லட்சங்களைத் தாண்டும் என்று தி.மு.க-வினரே கூறுகின்றனர். கலைஞர் கருணாநிதி பெயரிலேயே வசூல் வேட்டை நடத்திய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க-வினர் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.