கலைஞரின் சட்டசபை மொழியாற்றல்

 

கலைஞரின் சட்டசபை மொழியாற்றல்

கலைஞரின் தமிழ் ஆற்றல் அனைவரும் அறிந்தது தான். ஆனால் எதிரே இருப்பவர்கள் பேசி முடித்த அடுத்த நொடியே தன் தமிழாற்றலால் பல சமயங்களில் அவர் சொன்ன பதில்கள் அடடே ரகம். 
பல முறைகள் சட்டசபை விவாதங்களில் அவரது செயல்பாடுகள், எதிர் கட்சிக்காரர்களாலும் ரசிக்கப்பட்டது.

 

kalaignar karunanidhi

கலைஞரின் தமிழ் ஆற்றல் அனைவரும் அறிந்தது தான். ஆனால் எதிரே இருப்பவர்கள் பேசி முடித்த அடுத்த நொடியே தன் தமிழாற்றலால் பல சமயங்களில் அவர் சொன்ன பதில்கள் அடடே ரகம். 
பல முறைகள் சட்டசபை விவாதங்களில் அவரது செயல்பாடுகள், எதிர் கட்சிக்காரர்களாலும் ரசிக்கப்பட்டது. கலைஞர்  1957ல் முதன் முறையாக சட்டசபையில் தனது முதல் உரையைப் பேசிவிட்டு அமர்ந்ததும்,  அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில் ‘very good speech’ என்று எழுதிக் கொடுத்தனுப்பினார்.

kalaignar karunanidhi

‘தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலின் கருவறைக்குள் நுழைய உரிமை வேண்டும்’ என்று என்று ஒரு முறை கலைஞர் சட்டசபையில் பேசிக்கொண்டு இருந்தார். 
‘கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு ஏன் இந்த கவலை’ என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.என்.அனந்தநாயகி அப்பொழுது பதில் கேள்வியைக் கேட்டார். அதற்கு கருணாநிதி அடுத்த வினாடியே அதே வேகத்தில் கேள்வி கேட்ட அனந்தநாயகியைப் பார்த்து’ கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்கு போகிறார்கள், வாதாடுபவர்களும் தானே போக வேண்டும் ‘ என்று கேட்டு அதிர வைத்தார். இப்படி பலமுறை தனது மொழியாற்றலால் தான் சொல்ல வந்த கருத்தில் உறுதியாய் நின்றிருக்கிறார் கலைஞர்.