“கலா சக்ரவத்தினி” விருதை வென்றார் ஹேம மாலினி!

 

“கலா சக்ரவத்தினி” விருதை வென்றார் ஹேம மாலினி!

71 வயதான நடிகை ஹேம மாலினிக்கு கலா சக்ரவர்த்தினி விருது வழங்கப்பட்டது.

பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஹேம மாலினி இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தமிழில் ‘இது சத்தியம்’, ‘ஹேராம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் அவருக்கு தாயாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

இந்நிலையில் ஹேம மாலினி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒரு கலைஞராக எனது பங்களிப்பிற்காக “கலா சக்ரவர்த்தினி” என்ற விருது வழங்கப்பட்டது. புராண கதைகளை நாடகங்கள் மூலம் விளக்கும் பிரபல கலைஞர்களின் கையால் இந்த விருதை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார். இத்துடன் சிவன், பார்வதி போன்ற நடன அசைவுகளுடன் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.