கலால் வரி ரூ.3 உயர்வு… பெட்ரோல் டீசல் விலையும் உயரும்!

 

கலால் வரி ரூ.3 உயர்வு… பெட்ரோல் டீசல் விலையும் உயரும்!

கொரோனா பாதிப்பு காரணமாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் தேவை குறைந்திருப்பதால், அதன் உற்பத்தியும் குறைந்திருக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் தேவை குறைந்திருப்பதால், அதன் உற்பத்தியும் குறைந்திருக்கிறது. இருப்பினும் சவுதி அரேபியா அதிகமாக உற்பத்தி செய்வதால் கச்சா எண்ணெய் விலை குறைகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த மாதம் கச்சா எண்ணெய் விலை அதிக அளவு குறைந்துள்ளதால் அதனுடன் கலால் வரி, விற்பனையாளர் கமிஷன், தமிழக அரசின் வரி உள்ளிட்டவற்றைப் போட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.20 குறைவாகவே விற்க வேண்டும். ஆனால், விலை குறைக்கப்படவில்லை. இது தொடர்பாகப் பல கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. 

ttn

 உலகம் முழுவதும் பெட்ரோல்,டீசல் குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது, பெட்ரோல் டீசல் விலையில் போடப்படும் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 முதல் 8 ஆகவும், டீசலுக்கு ரூ.4 ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாகவும் இன்று முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.  செஸ் வரி பெட்ரோல் மற்றும் டீசல் வரி ரூ.1ல் இருந்து 10 ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலால் வரி அதிகரிப்பினாலும்  சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்படும் விகிதங்களின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.