‘கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் போன தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி’: தமிழில் ட்வீட் செய்த மோடி

 

‘கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் போன தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி’:  தமிழில் ட்வீட் செய்த மோடி

சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்துள்ள மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்துள்ள மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று  மற்றும் நாளை (அக்12) ஆகிய தேதிகளில் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதனால் இரண்டு நாட்கள் பயணமாக மோடி சென்னைக்கு  வருகை புரிந்துள்ளார்.  இந்திய ராணுவப்படையின் தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

modi

குறிப்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்ததுடன் பொன்னாடை போர்த்தி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

 

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையை அடைந்துள்ள மோடி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

மற்றொரு பதிவில், ‘சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஏற்கனவே கடந்த முறை சென்னை ஐஐடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்த மோடி, சென்னைக்கு வருவது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் தமிழ் மொழி குறித்து சிறப்பித்தும்  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.