கலவரத்துக்கு மத்தியிலும் ஒற்றுமையை வெளிப்படுத்திய டெல்லிவாசிகள்…..இந்துக்களுடன் இணைந்து கோயிலை பாதுகாத்த முஸ்லிம்கள்…..

 

கலவரத்துக்கு மத்தியிலும் ஒற்றுமையை வெளிப்படுத்திய டெல்லிவாசிகள்…..இந்துக்களுடன் இணைந்து கோயிலை பாதுகாத்த முஸ்லிம்கள்…..

வடகிழக்கு டெல்லியில் பெரும் கலவரத்துக்கு மத்தியிலும், அந்த பகுதியில் உள்ள இந்து கோயிலை இந்துக்களுடன் இணைந்து முஸ்லிம்கள் மனித சங்கலி அமைத்து பாதுகாத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் பெரும் வன்முறை வெடித்தது. பிரச்சினையை பெரிதாக்கும் நோக்கில் கலவரகாரர்கள் பெரிய அளவில் வன்முறையை கையாண்டார்கள். இருப்பினும், போலீசின் கடுமையான நடவடிக்கைகளால் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.

ஒற்றுமை

இந்த கலவரத்துக்கு மத்தியிலும் மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்திய ஒரு சம்பவம் நடந்துள்ளது. வடகிழக்கு டெல்லியின் சந்த் பாக் பகுதியில் ஸ்ரீ துர்கா பக்கிரி கோயில் உள்ளது. இந்த கோயிலை சேதப்படுத்த கலவரர்காரர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் கோயில் பகுதியில் மனித சங்கலி அமைத்து கலவரகாரர்கள் முன்னேறி வராதவாறு தடுத்து விட்டனர். இதனால் பெரும் மதகலவரம் தடுக்கப்பட்டது.

ஸ்ரீ துர்கா பக்கிரி கோயில் பகுதி

சந்த் பாக் பகுதியை சேர்ந்த ஆசிப் இது குறித்து கூறுகையில், நாங்கள் மனித சங்கலி அமைத்தோம் மற்றும் கலவரகாரர்களை முன்னேறவிடவில்லை. கலவரகாரர்கள் கற்களை வீசி தாக்கியதால் எங்களில் பலர் படுகாயம் அடைந்தனர். இருப்பினும் நாங்கள் அவர்களை முன்னேறவிடவில்லை. ஏனென்றால் இது வெறும் கோயில் அல்ல. எங்களது கௌரவத்தின் சின்னம். இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து இந்த கோயிலை பாதுகாத்தோம் என தெரிவித்தார். கோயில் பூசாரி இது தொடர்பாக கூறுகையில், இந்த பகுதியை சேர்ந் இந்துக்களும், முஸ்லிம்களும் எச்சரிக்கையாக இருந்தனர். வெளிஆட்கள் யாரையும் அவர்களை உள்ளே வரவிடாமல் பார்த்து கொண்டனர் என தெரிவித்தார்.