“கலர் பூசப்பட்ட 250 கிலோ பட்டாணி, 40 டன் வாழைப்பழம்” : கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த அதிரடி சோதனையில் அம்பலம்!

 

“கலர் பூசப்பட்ட 250 கிலோ பட்டாணி, 40 டன் வாழைப்பழம்” : கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த அதிரடி சோதனையில் அம்பலம்!

பழங்களில் செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பழங்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உற்பத்தியைப் பெருக்குவதற்காக ரசாயன உரங்கள் போடப்பட்டு காய்கறி மட்டும் பழங்கள் உருவாக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் கோஸ் எனத் தினந்தோறும் புதிது புதிதாய் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடலாமா, வேண்டாமா என்று மக்கள் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் இந்நிலையில், பழங்களில் சாயம் பூசப்படுகிறது என்னும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. 

koyembedu

மிகப்பெரிய சந்தையான சென்னை கோயம்பேட்டில் மொத்த விலைக்குப் பழங்களும் காய்கறிகளும் விற்கப்பட்டு வருகின்றன. அதில், பழங்களில் செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பழங்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து இன்று காலை 2 மணியளவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனை சுமார் 75 கடைகளில் நடைபெற்றுள்ளது. 

friut

அதில் 2 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 40 டன் வாழைப்பழங்கள், 10 கிலோ டபுள் பீன்ஸ் மற்றும் 250 கிலோ பட்டாணியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், செயற்கை நிறம் ஏற்றி விற்கக் கூடாது என்று மற்ற கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்ததன் பிறகு, செயற்கை நிறம் ஏற்றி பொருட்களை விற்ற கடைகளை மூடுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.