கலசம்பாக்கம் அருகே இளைஞர் குத்திக்கொலை.. ஊர் சண்டையால் நேர்ந்த விபரீதம் : 144 தடை உத்தரவால் பரபரப்பு!

 

கலசம்பாக்கம் அருகே இளைஞர் குத்திக்கொலை.. ஊர் சண்டையால் நேர்ந்த விபரீதம் : 144 தடை உத்தரவால் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த மேலாரணி என்னும் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று 
உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த மேலாரணி என்னும் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று 
உள்ளது. அதில் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் இளம்பெண்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர். 3 நாள் தொடர்ந்து நடைபெறுவதால் சில பெண்கள் அங்கேயே தங்கியுள்ளனர். 

ttn

மேலாரணியில் போட்டி நடைபெறுவதால் எல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு அடிக்கடி பைக்கில் கும்பல் கும்பலாக வந்து செல்வதுமாக இருந்துள்ளனர். இது மேலாரணி இளைஞர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வண்டியை வேகமாக ஓட்டுவதால், மேலாரணி இளைஞர்கள் எல்லூர் கிராம இளைஞர்களை எச்சரித்துள்ளனர்.

tn

ஆனால், அவர்கள் அதனைக் கேட்காமல் அதே போலச் செய்து கொண்டே இருந்துள்ளனர். இதனால் கடுப்பான மேலாரணி இளைஞர்கள், நேற்று அவர்கள் வரும் வழிக்குக் குறுக்கே பைக்கை நிறுத்திவிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சற்று நேரத்தில் அது சண்டையாக மாறியுள்ளது. அப்போது எல்லூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மேலாரணியை சேர்ந்த கலையரசன்(25) என்பவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கலையரசன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். 

ttn

இதனை அறிந்த மேலாரணி ஊர்மக்கள் அங்கு திரண்டு பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த எல்லூர் இளைஞர்களின் பைக்குகளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதனால், அங்கு மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றுள்ளனர். அப்போது, மேலாரணி கிராம மக்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் விளையாட்டுப் போட்டி நடக்கும் பள்ளிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு, 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். 

ttn

இதனிடையே இன்று காலை கலையரசனைக் கொலை செய்த எல்லூர் கிராம இளைஞர்களைக் கைது செய்யக் கோரி கலையரசனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற  ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கலையரசனைக் கொலை செய்தவரைத் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.