கலங்கிய கனிமொழி… காய் நகர்த்தும் எடப்பாடி… அஞ்சி ஒடுங்கும் மு.க.ஸ்டாலின்..!

 

கலங்கிய கனிமொழி… காய் நகர்த்தும் எடப்பாடி… அஞ்சி ஒடுங்கும் மு.க.ஸ்டாலின்..!

எடப்பாடியாரால் துணிந்து வைக்கக் கூடிய ஒரே விமர்சனம் இப்போதைக்கு ‘தி.மு.க. ஒரு வாரிசு கட்சி.’ என்பது மட்டுமே. அதையும் கெட்டியாக பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டே இருக்கிறார்.

கலங்கிய கனிமொழி… காய் நகர்த்தும் எடப்பாடி… அஞ்சி ஒடுங்கும் மு.க.ஸ்டாலின்..!

தன் ஆட்சியின் மீது ஏதேதோ புகார்களைச் சொல்லி அடித்து அந்தர் பண்ணும் ஸ்டாலினுக்கு எதிராக மக்கள் மத்தியில் எடப்பாடியாரால் துணிந்து வைக்கக் கூடிய ஒரே விமர்சனம் இப்போதைக்கு ‘தி.மு.க. ஒரு வாரிசு கட்சி.’ என்பது மட்டுமே. அதையும் கெட்டியாக பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டே இருக்கிறார். வேலூரின் சந்து பொந்துகளில் எல்லாம் இதை பேசி முடித்தவர் இதோ இப்போது தமிழகமெங்கும் இதை பேசி வருகிறார்.

‘நான் ஒரு சாதாரண விவசாயி. எங்கள் அ.தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால் என்னால் இங்கே முதல்வர் எனும் மிகப்பெரிய பொறுப்புக்கு வர முடிகிறது. ஆனால், தி.மு.க.வில் இந்த ஜனநாயகம் ஒரு துளியளவாவது இருக்கிறதா? அங்கிருக்கும் நிர்வாகிகளுக்கு ’தலைவர்’ எனும் பதவிக்கு வந்து அமர கூடிய வாய்ப்பு கனவிலாவது இருக்கிறதா?” என்று தாரை தப்பட்டை அடிக்காத குறையாக தாறுமாறாக போட்டுப் பொளந்துவிட்டார் முதல்வர்.

அவரின்  இந்த விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் ‘உண்மையைதானே சொல்றார்’ என்று செம்ம ரெஸ்பான்ஸ். அது கூட பரவாயில்லை, தி.மு.க.வின் நிர்வாகிகள் மத்தியிலே ‘நாம பேச முடியல. மகராசன் அவர் பேசுறார்’ என்று ஏகப்பட்ட வரவேற்பு. இவை எல்லாமே ஸ்டாலினை அநியாயத்துக்கு மனம் வெதும்ப வைத்துவிட்டன.

’வாரிசு கழகம்’ என்று பரவும் விமர்சனங்களுக்கு உடனடியாக செக் வைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படிதான் வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருந்த கனிமொழியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாம். கூடவே கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளான கடந்த 7-ம் தேதியன்று சென்னையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட  பொதுக்கூட்டத்தில் உதயநிதியை பேச வைப்பதாக இருந்த அஜண்டாவும் கைவிடப்பட்டதாம். கழகத்தின் இளைஞரணி மாநில அமைப்பாளர் எனும் பெரும் பதவிக்கு வந்திருக்கும் உதயநிதி, தாத்தாவின் முதல் நினைவுநாள் மேடையில் பேச பெரிதும் பிரயாசைப்பட்டிருக்கிறார். ஆனால் கழக நலன் என்று சொல்லி ஸ்டாலின் அதற்கு தடை போட்டு விட்டார்.

இந்நிலையில் ஸ்டாலினின் ‘அடக்கி வாசி’ மூவ்களை அறிந்து கொண்ட அ.தி.மு.க. தரப்போ “எங்கள் முதல்வர் எடப்பாடியாரின்  விமர்சனங்களைக் கண்டு பயந்துவிட்டார் ஸ்டாலின்” என்று பெருமைப் பட்டுக்கிறார்கள்.