கலக்கத்தில் ஸ்விக்கி, சுமோட்டோ…… உணவு டெலிவரி வர்த்தகத்தில் களமிறங்கும் அமேசான் நிறுவனம்…..

 

கலக்கத்தில் ஸ்விக்கி, சுமோட்டோ…… உணவு டெலிவரி வர்த்தகத்தில் களமிறங்கும் அமேசான் நிறுவனம்…..

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் உணவு டெலிவரி வர்த்தகத்தில் களமிறங்க உள்ளது. செப்டம்பரில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை அந்நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் செல்போன் முதல் பேனா வரை இல்லாத பொருட்களே கிடையாது. இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தி வரும் அமேசான் நிறுவனம் தற்போது உணவு டெலிவரி சேவை பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளது. இதற்காக பிரபல ஐ.டி. தொழிலதிபர் நாரயணமூர்த்தியின் நிறுவனத்தோடு அமேசான் கைகோர்த்துள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி

வேகமான இந்த உலகத்தில் பெருநகரங்களில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. நினைத்த நேரத்துக்குள் உணவு வீட்டுக்கே வந்து விடும் என்பதால் ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது உணவு டெலிவரி வர்த்தகத்தில் ஸ்விக்கி, டென்சென்ட் மற்றும் சுமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் நிறுவனமும் இத்துறையில் களம் இறங்க உள்ளது.

அமேசான்

அமெரிக்காவின் சியாட்டிலை சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகத்தில் களம் இறங்குவதற்காக நாரயணமூர்த்தியின் catamaran நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. மேலும், புதிய வர்த்தகத்துக்காக பணியாளர்களை அமேசான் நிறுவனம் தேர்ந்தெடுத்து வருவதாகவும் தகவல்.

ரெஸ்ட்ராண்ட்டுகளில் இருந்து உணவு டெலிவரி செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் நீண்ட கால பண்டிகை காலத்துக்கு முன்பாக தொடங்க உள்ளது. வரும் செப்டம்பரில் ஆன்லைன் புட் டெலிவரி வர்த்தகத்தை அமேசான் தொடங்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.