கலகலப்பான மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்: வைரல் போட்டோஸ்!

 

கலகலப்பான மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்: வைரல் போட்டோஸ்!

சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடையப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் மாநாடு திரைப்படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. 

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார்.  இதையடுத்து சிம்புவுடன் ஏற்பட்ட பிரச்னையால் மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாகப்  படத்தின் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.  இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடையப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் மாநாடு திரைப்படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. 

ttn

அரசியல் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகர் எஸ்.ஜே . சூர்யா, பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ், ஒய்.ஜி. மகேந்திரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 

ttn

இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் ஷூட்டிங் முடிந்து ஐதராபாத்தில் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ளது.  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு ஷூட்டிங் புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எஸ்.ஜே.சூர்யா, சிம்பு இருக்க அவர்களுடன் பாரதிராஜா மகன் மனோஜ் போலீஸ் சீருடையில் உள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.