கற்றாரை கற்றாரே காமுறுவர்!

 

கற்றாரை கற்றாரே காமுறுவர்!

“கிரிக்கெட்ன்னா மூணு குச்சிய வச்சிகிட்டு விளையாடுவாங்களே அதுதானே” என்கிற அளவுக்கு மட்டும் கிரிக்கெட் அறிவு இருக்கிறவர்களின் சமீபத்திய கூச்சல் டோனி ஓய்வு பெறவேண்டும் என்பது. இப்படித்தான் டெண்டுல்கர் 35 வயதை தாண்டிய பிறகும் கூச்சலிட ஆரம்பித்தார்கள்

“கிரிக்கெட்ன்னா மூணு குச்சிய வச்சிகிட்டு விளையாடுவாங்களே அதுதானே” என்கிற அளவுக்கு மட்டும் கிரிக்கெட் அறிவு இருக்கிறவர்களின் சமீபத்திய கூச்சல் டோனி ஓய்வு  பெறவேண்டும் என்பது. இப்படித்தான் டெண்டுல்கர் 35 வயதை தாண்டிய பிறகும் கூச்சலிட ஆரம்பித்தார்கள், அதாவது இளைஞர்களுக்கு வழிவிட்டு சச்சின் ஓய்வுபெறவேண்டும் என. ஏன்டா, சச்சின் விலகுனாலும்கூட அவருக்குப் பதிலா ஒரே ஒருத்தனைத்தானேடா சேர்க்க முடியும், சச்சினுக்குப் பதிலா கூடுதலா 5 பேரை சேத்துக்க ஐ.சி.சி. ஒத்துக்காதேடான்னு யாரும் அப்ப கேக்கலை, சச்சினும் கவுரவமாக ஒதுங்கிக்கொண்டார். இப்போது அதே கூச்சலை தோனிக்கும் கிளப்புகிறார்கள்.

Lata Mangeshkar tweet

ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்து தோனி கொடுக்கும் அறிவுரை எவ்வளவு முக்கியமானது என்பதை பவுலர்கள் அறிவார்கள். முதலில் பேட்டிங் செய்யும் 4 பேர் சொதப்பினாலும், ஐந்தாவதாக களமிறங்கும் தோனி மீது மட்டும் ஸ்பெஷல் பைனாகுலர் வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோனி அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி தன் மதிப்பை இதுவரை குறைத்துக்கொண்டதில்லை. தோனியின் மதிப்பை இந்திய அணி நன்கு அறியும். பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரும் தோனியின் அருமையை உணர்ந்திருக்கிறார். அரையிறுதி தோல்விக்குப் பிறகு தோனிக்கு அவர் பதிவிட்டுள்ள ட்விட்டீல், ‘‘நீங்கள் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்ற செய்தியை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தயவு செய்து அதுபோன்ற எண்ணம் வேண்டாம். நாட்டிற்கு நீங்கள் தேவை. ஓய்வு முடிவு பற்றி சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார். கற்றாரை கற்றாரே காமுறுவர்!