கற்ப காலத்தில் மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்

 

கற்ப காலத்தில் மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை எமி ஜாக்சன் விக்ரம், விஜய், உதயநிதி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். 

இவர் கடந்த ஜனவரி மாதம் தொழிலதிபர் ஜார்ஜ் பனையோத்துவை காதலிப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். திருமணத்துக்கு முன்பு கர்ப்பமானதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் எமி தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு தன்னை எப்போதும் குஷியாகி வைத்துள்ளார். 

அந்த வகையில் தற்போது தனது குழந்தை 33 வாரம் வளர்ச்சி அடைந்திருப்பதைக் குறித்து புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வயிறு பெரிதாக இருப்பதால் துணியைப் போட்டு மூடி மறைக்க விரும்பவில்லை. இதுவும் ஒரு அழகு, இதுவும் ஒரு தனி அனுபவம் என்று பெருமையுடன் தனது பெரிய வயிறை காட்டியுள்ளார். அரை நிர்வாண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.