கறி அடை! சைட் டிஷ்சே வேண்டாம் : அப்படியே சாப்பிடலாம்.

 

கறி அடை! சைட் டிஷ்சே வேண்டாம் : அப்படியே சாப்பிடலாம்.

வீட்டில் மட்டன் அல்லது சிக்கன் செய்யும் நாட்களில்,கறி மிச்சமாகிவிடும் என்று தோன்றும் போது இந்தக் கறி அடை கை கொடுக்கும் .இது ராமநாதபுரம், கீழக்கரை பகுதியில் புதியாய் கல்யாணமான மணமக்கள் விருந்துக்கு வரும்போது செய்யப்படும் பலகாரமாகும்.எலும்பு இல்லாத கறியாக ஒரு கால் கிலோ அளவுக்கு ,கிரேவியுடன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 
வாருங்கள் கறி அடை செய்வோம்.

என்னென்ன தேவை :

சமைத்து வைத்த கறியும் குழம்பும் ¼ கிலோ

curry

அரிசி மாவு 1 கிலோ
தேங்காய் பால் ¼ லிட்டர்
தேங்காய் துருவல் 2 கப்
பச்சை மிளகாய் 4

cocounut

வெங்காயம் ¼ கிலோ
கீரைப்பொடி 3 ஸ்பூன் ( காய்ந்தமிளகாய்,சோம்பு சீரகம் இவற்றை வறுத்துப் பொடித்தது)
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
முட்டை 2

gravy

கறிவேப்பிலை ஒரு கொத்து.
நெய் 
உப்பு

dosa

அரிசி மாவுடன் பொடியாக வெட்டிய வெங்காயம்,பச்சை மிளகாய்,தேங்காய் பால்,மற்ற பொடிகள் அனைத்தையும் சேர்த்து பிசையுங்கள்,அத்துடன் இரண்டு முட்டைகளையும் உடைத்து ஊற்றி பிசையுங்கள்.உப்புச் சேர்த்துக் கொள்ளுங்கள்.எலும்பில்லாத கறியை மிக்சியில் போட்டு ஓன்றுக்குப் பாதியாக அரைத்து அதையும் மாவில் சேர்த்து,கொஞ்சம் கறிக்குழம்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளுங்கள்.

dosa2

இப்போது சற்றே குழிவான ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதை கல்லில் பரப்பி விட்டு,அடைமாவை எடுத்து கையில் வைத்து தட்டி அதை தோசைக் கல்ல்லில் போட்டு அடைபோல இரண்டு பக்கமும் புரட்டிப் போட்டு எடுத்தால் கறி அடை ரெடி!