கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

 

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது

சென்னை: கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்றுடைய ரத்தம் ஏற்றப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பெண்ணின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சாத்தூர் டவுன் காவல் நிலையம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் ஆய்வு நடத்த உள்ளது.

இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது. தானமாக அளிக்கப்பட்ட ரத்தத்தை முறையாகப் பரிசோதிக்காதது ஏன்? கர்ப்பிணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன, சிசுவுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ள நீதிமன்றம், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 3-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.