கர்ப்பிணிக்கு மாத்திரை வாங்க சென்ற கணவன்: பைக்கை பறிமுதல் செய்த போலீஸார்!

 

கர்ப்பிணிக்கு மாத்திரை வாங்க சென்ற கணவன்: பைக்கை பறிமுதல் செய்த போலீஸார்!

வழிமறித்த போலீஸார், ஊரடங்கில் வெளியே வந்ததற்காக வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கருங்கல்லூர் பெத்தான் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி பெரியசாமி. இவருக்கு  சண்முகப்பிரியா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.  தற்போது சண்முகப்ரியா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். 

இந்நிலையில் மனைவி சண்முகப்பிரியாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு  உடல் உபாதை ஏற்பட்டதால், மாத்திரை வாங்க அவரது கணவர் கொளத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த போலீஸார், ஊரடங்கில் வெளியே வந்ததற்காக வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

gt

இதைதொடர்ந்து கர்ப்பிணி சண்முகப்பிரியா கருங்கல்லூரில் இருந்து கொளத்தூர் காவல்நிலையத்திற்கு நடந்தே சென்று எனக்கு மாத்திரை வாங்க தான் கணவர் வந்தார் என்று கூறி கெஞ்சியுள்ளார். ஆனால் அவரது பேச்சை கேட்காத போலீசார் வெளியில் செல் என்று மிரட்டி  விரட்டியதாக தெரிகிறது. 

tt

மேலும் நேற்று பிற்பகல் கணவன் மனைவி இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று பைக்கை தருமாறு கேட்டு இரவு 9 மணி வரை நின்றுள்ளனர். ஆனாலும் அவர்களிடம் பறிமுதல் செய்யபட்ட வாகனத்தை திருப்பிக்கொடுக்க போலீசார்  மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து கணவன் – கர்ப்பிணி மனைவி இருவரும் கொளத்தூரில் இருந்து கருங்கல்லூருக்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று, இரவு 11 மணி அளவில் வீடு சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.