கர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்?

 

கர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்?

பால், பால் பொருள்கள் மற்றும் இனிப்பு வகைகளில் நிறைய கொழுப்பு இருப்பதால் எளிதில் உடல் பருமன் அடைய வாய்ப்பு உண்டு.  எனவே, மிகக் குறைந்த கலோரி மற்றும், கொழுப்பு குறைவான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு கர்ப்பிணிகள் சாப்பிட்டு வரலாம்

பால், பால் பொருள்கள் மற்றும் இனிப்பு வகைகளில் நிறைய கொழுப்பு இருப்பதால் எளிதில் உடல் பருமன் அடைய வாய்ப்பு உண்டு.  எனவே, மிகக் குறைந்த கலோரி மற்றும், கொழுப்பு குறைவான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு கர்ப்பிணிகள் சாப்பிட்டு வரலாம். 

கர்ப்பக் காலம் முழுவதும் மொத்த எடை அளவு, இயல்பான எடையுடன் பத்து அல்லது பன்னிரண்டு கிலோவுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அதிக எடை அல்லது இயல்பைவிட குறை எடை ஆகிய இரண்டுமே பல அபாயங்களைக் கொண்டு வருவதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன.

தாயின் எடை உணராமல் நிலையாகவோ அல்லது இயல்பை விட குறைவாகவோ இருந்தால் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறத்தல் அல்லது கர்ப்பத்திலேயே இறத்தல் ஆகிய அபாயங்கள் ஏற்படுகின்றன.  கர்ப்பிணியின் எடை அதிகமாக இருந்தால், பிறக்கப் போகும் குழந்தைக்கு மாற்ற பிரச்னைகளுடன் டாக்ஸீமியா நோய் உடனடியாக ஏற்படுவதோடு, பிற்காலத்தில் அக்குழந்தை உடல் பருமன் பிரச்னையால் அவதியுற நேரிடும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இயல்பான எடையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு மருத்துவ ஆலோசனைகளைக் கேளுங்கள், சரிவிகித ஊட்டச்சத்து உணவைப் பின்பற்றுங்கள்.

நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள் இன்றியமையாதவை.  இவை தினமும் மிகக் குறைந்த அளவில் உணவின் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய, உடலுக்கு மிக முக்கியமான அங்ககப் பொருள்கள்தான்  வைட்டமின்கள்.  இவை மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), புரதம் (புரோட்டீன்), கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை வினை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் நேரடியாக ஈடுபடுகின்றன.  உடல் திசுக்கள் பராமரிக்கப்படுவதன் மூலம் ஏற்படும் எதிர் வினைகளை ஒழுங்குபடுத்துவதிலும் உதவி செய்கின்றன.

உடலில் உள்ள பெரும்பாலான எதிர்வினைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வைட்டமின்கள் தேவை.  இவற்றுள் ஏதேனும் ஒன்று குறையும்போது இன்னொன்றின் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்படும்.

கேள்வி: நான் அதிக உடல் பருமனுடன் இருக்கிறேன்.  எனக்குப் பிறக்கும் குழந்தையும் இவ்வாறு பிறக்க வாய்ப்பு இருப்பதால் பிரசவ காலச் சிக்கல் ஏற்படும் என்றும், குழந்தைக்கு நீரிழிவு போன்ற நோய்கள் எளிதில் வரும் என்றும் என் கணவர் கூறுகிறார்.  வயிறு, வாயைக் கட்டி உடம்பைக் குறைத்துக் கொள் என அறிவுறுத்துகிறார்.   இதற்காக பட்டினி கிடந்து உடம்பைக் குறைத்துக்கொண்டால் குழந்தை நோயின்றி, சிறியதாகப் பிறக்குமா?  அல்லது குழந்தை பெற்ற பிறகு உடம்பு தானாக இளைக்குமா?

மருத்துவ ஆலோசனை: உணவுக் கட்டுப்பாட்டை மிக அதிகமாகப் பின்பற்றினால் மிகக் குறைந்த எடையுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.  இதனால், குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவதோடு, ஊட்டச்சத்துக் குறை நோய்களும் வரும்.  உடல் பருமன் அதிகமாக இருந்தால் தானாக குறைவதற்கும் வாய்ப்பில்லை.  கூடுமானவரை நடப்பது, நீந்துவது போன்ற உடற்பயிற்சியுடன் கலோரி குறைந்த உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பழகுங்கள்.  அதேசமயம், கர்ப்பக் காலத்தில் தேவையான சத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளாமல் இருக்கவும் உணவியல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.