கர்ப்பிணிகளுக்கு இனி சுற்றுலா விசா அனுமதி இல்லை – டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

 

கர்ப்பிணிகளுக்கு இனி சுற்றுலா விசா அனுமதி இல்லை – டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

வெளிநாட்டை சேர்ந்த கர்ப்பிணிகள் சுற்றுலா விசா பெற அனுமதி இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வா‌ஷிங்டன்: வெளிநாட்டை சேர்ந்த கர்ப்பிணிகள் சுற்றுலா விசா பெற அனுமதி இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் குடியேறுவதற்கும், குடியுரிமை பெறுவதற்கும் பல்வேறு நாட்டினர் புதுமையான முறைகளில் அல்லது குறுக்கு வழிகளில் முயற்சி செய்கின்றனர். அதில் ஒன்று… கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு சென்ற பின் அங்கு குழந்தை பெற்றால், அந்தக் குழந்தைக்கு எளிதாக அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க குடியுரிமையை பெற முயற்சி செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக வேண்டுமென்றே அமெரிக்காவுக்கு பயணம் செய்து அங்கு அவர்கள் குழந்தை பெற்று கொள்வதாக கூறப்படுகிறது.

TRUMP

இந்நிலையில், அதை தடுக்கும் நோக்கில் இனி வெளிநாட்டு கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் பல கெடுபிடிகளை விதிக்க டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா எனவும் அல்லது கருவுறும் திட்டம் இருக்கிறதா எனவும் கேள்விகள் எழுப்பப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு உலக நாடுகளில் உள்ள பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.