கர்ப்பப்பையை வலுவூட்டும் உளுந்தங்கஞ்சி

 

கர்ப்பப்பையை வலுவூட்டும் உளுந்தங்கஞ்சி

பெண்களுக்கு கர்ப்பப்பை மிகவும் வலுப்பெறும். மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது. முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது

பெண்களுக்கு கர்ப்பப்பை மிகவும் வலுப்பெறும். மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது. முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.

தேவையான பொருட்கள்:

உளுந்தம்பருப்பு: ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது)
பச்சரிசி: அரை டம்ளர்
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
பூண்டு: 20 பல்லு 
வெல்லம் அல்லது கருப்பட்டி: இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய்: ஒரு மூடி

செய்முறை:

உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.
குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.

ulundhaganji

தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும்.

food

தேங்காய் துருவியும் போடலாம்.சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்.செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.

food