கர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது?

 

கர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது?

குழந்தையின் காரணமாகவும், மார்பகங்கள் மிகவும் வலியுணர்வுடன் இருப்பதாலும் ஆண் மேற்புறம் இருந்து உடலுறவுகொள்வது அசௌகரியம் தரலாம்

கர்ப்பக் காலத்தில் எந்த நிலையில் இருந்து உடலுறவு கொண்டால் குழந்தைக்குப் பிரச்னை இருக்காது.  குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க ஏதாவது யுக்திகள் இருக்கின்றனவா?

முதன்முறையாகக் கர்ப்பம் தரித்த பல பெண்களுக்கு இத்தகைய பயம் இருக்கத்தான் செய்கிறது.  இந்தப் பயத்தைத் தவிர்க்கவும், உடலுறவைப் பயமின்றி பெறவும் நீங்கள் சில அட்ஜஸ்ட்மென்ட்களைச் செய்துகொள்ளலாம்.

sex

உதாரணமாக, குழந்தையின் காரணமாகவும், மார்பகங்கள் மிகவும் வலியுணர்வுடன் இருப்பதாலும் ஆண் மேற்புறம் இருந்து உடலுறவுகொள்வது அசௌகரியம் தரலாம். தவிர, ஆணுறுப்பு மிக ஆழமாக ஊடுருவுமேயானால் பெண்ணுக்கு அசௌகரியமாக இருக்கும் ஆகவே, ஒருக்களித்த நிலையில் அல்லது ஆண், பெண்ணின் பின்புறம் இருந்து அல்லது பெண், ஆணின் மீதிருந்து உறவுகொள்வதே பொருத்தமாக இருக்கும்.

pregnancysex

கர்ப்பக் காலத்தில் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும் என கணவர் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்.  இது சரியா?

இயல்பான கர்ப்பத்தின்போது உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான கட்டாயம் எதுவும் இல்லை. உடலுறவுகொள்வதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆணுறுப்பு, பெண்ணுறுப்பைத் தாண்டி துாண்டப்படுவதில்லை.  கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடிவைத்துவிடுகின்றன. இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை உடலுறவைத் தவிர்ப்பது பற்றி தீர்மானிக்கலாம்.

pregnancysex

இவ்வாறு தவிர்ப்பது மிகவும் பாதுகாப்பானது.  எப்போதாவது சிறிது ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தால், பிறப்புறுப்பு அல்லது அடிவயிற்று வலி இருந்தால் உடலுறவைத் தவிர்ப்பதும் முழுமையாக ஓய்வெடுப்பதும் சிறந்தது.

சந்திர கிரணம், சூரிய கிரணத்தின்போது கர்ப்பிணிகள் அதைப் பார்க்கக் கூடாது எனச் சொல்லப்படுவது ஏன்?

pregnancysex

இது ஒருவித மூடநம்பிக்கைதான்.  கிரணம் முடியும் வரை அறையை மூடிக்கொண்டு படுத்துக்கிடக்க வேண்டும்.  வெளியே எட்டிப்பார்த்துவிடக் கூடாது என்று சொல்வார்கள்.  அறிவியல்பூர்வமாக இதற்கு விளக்கம் சொல்லும் போது, அல்ட்ரா வயலட் கதிர்கள் (புற ஊதாக் கதிர்கள்) தாயை ஊடுருவும்போது, அது குழந்தைக்குப் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள். இதைக் கேட்டு உடனே நடுங்கிவிடவோ, திடுக்கிடவோ வேண்டாம்.  இவையெல்லாம் சாதாரணமானவை.  எதையும் அறிவியல்பூர்வமாக அணுகி அதன்படி நடக்கத் தொடங்குங்கள்.