கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமாருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

 

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமாருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனையின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமாரைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனையின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமாரைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இதனையடுத்து பல முறைகள் அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சிவகுமார் வங்கிக் கணக்கில் ரூ.200 கோடியும், சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா வங்கிக் கணக்கில்  ரூ.108 கோடியும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதால், ஐஸ்வர்யாவிற்கு சம்மன் அனுப்பி அமலாகத் துறை விசாரித்து வருகிறது. 

DK Shivakumar

அதனையடுத்து, கடந்த 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டார். அப்போது, நீதிபதி அஜய்குமார் குஹார், அவரின் மீதான ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, சிவகுமாரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்கும் படி உத்தரவிட்டார். 

Supreme court

இதனையடுத்து, சிவகுமார் 14 நாட்கள் காவல் முடிந்து இன்று மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டி.கே சிவகுமாரை மீண்டும் 14 நாட்கள் அதாவது, வரும் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.