கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி பதவி விலக வேண்டும் – பாஜக கடும் சாடல்!!

 

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி பதவி விலக வேண்டும் – பாஜக கடும் சாடல்!!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதள கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு குமாரசாமிதான் காரணம். இதனால், அவர் உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது

2018 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு 104 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி 80 சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 224 தொகுதிகளில் குறைந்தபட்சம் 113 தொகுதிகளில் வென்று இருக்க வேண்டும். ஆனால் இரு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆதலால், கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் என்னும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம் 37 தொகுதிகளில் வென்றிருந்தது. காங்கிரசு குமாரசாமியை நாடியபோது, முதலமைச்சர் பதவி கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் இணைவதாக கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அதற்கு ஒப்புக் கொண்டு, காங்கிரசு மற்றும் ஜனதா தள கூட்டணி ஆட்சியமைத்தது.

HD Kumarasamy

இக்கூட்டணி, 17வது நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில் 25 இல் பாஜகவும் இரண்டு இடங்களில் காங்கிரசும், ஒரு இடத்தில் மற்ற கட்சியும் வெற்றி பெற்றது.

 தற்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் மற்றும் ஜனதாதள கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் இப்படி ஒரு மோசமான தோல்வியை தழுவிய தனக்கு முதலமைச்சர் குமாரசாமிதான் முழு காரணம் அவர் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என பாஜக கடுமையாக சாடியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா கூட்டணியை உடனடியாக கவர்னர் நீக்கிவிட்டு, மிகப்பெரும் கட்சியான பாஜகவை அழைத்து ஆட்சி அமைக்க உத்தரவிட வேண்டும். மேலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தில் இருக்கும் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தங்களது ஆதரவை விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கலாம் எனவும் பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.