கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்பு!

 

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்பு!

குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியதால் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

கர்நாடகா: கர்நாடகாவின் புதிய முதல்வராக எடியூரப்பா இன்று மாலை  பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

kumarasamy

கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், எடியூரப்பாவுக்கு ஆதரவாக  105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனால்  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியதால் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.இதனால் கர்நாடகாவில், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி முடிவுக்கு வந்தது.

yeddurappa

இந்நிலையில் கர்நாடகாவின்  எதிர்கட்சித் தலைவர்  எடியூரப்பா புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார்  என்று  பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டது. அதன்படி  கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா இன்று உரிமை கோரினார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.