கர்நாடக கோயிலில் 7 தலை பாம்பு! உண்மையான புராண கதைகள்!

 

கர்நாடக கோயிலில் 7 தலை பாம்பு! உண்மையான புராண கதைகள்!

ஐந்து தலை பாம்பு, ஏழு தலை பாம்பு என்றெல்லாம் புராண கதைகளில் படித்திருக்கிறோம். நமக்கு சிறு வயதில் கதைச் சொன்ன பெரியவர்கள், ஐந்து தலைப் பாம்பின் மீது அரக்கன் அட்டூழியம் செய்ததையும், அசுரர்கள் ஏழு தலை பாம்பாக உருவெடுத்து அராஜகம் செய்து வந்ததையும் சொல்லும் போது, விழிகள் விரிய கதைக் கேட்டு, பெரியவர்களானதும் அவை எல்லாமே வெறும் கட்டுக் கதைகள் என்று பகுத்தறிவு பேசியவர்கள் பலரும் இருப்பார்கள்.

ஐந்து தலை பாம்பு, ஏழு தலை பாம்பு என்றெல்லாம் புராண கதைகளில் படித்திருக்கிறோம். நமக்கு சிறு வயதில் கதைச் சொன்ன பெரியவர்கள், ஐந்து தலைப் பாம்பின் மீது அரக்கன் அட்டூழியம் செய்ததையும், அசுரர்கள் ஏழு தலை பாம்பாக உருவெடுத்து அராஜகம் செய்து வந்ததையும் சொல்லும் போது, விழிகள் விரிய கதைக் கேட்டு, பெரியவர்களானதும் அவை எல்லாமே வெறும் கட்டுக் கதைகள் என்று பகுத்தறிவு பேசியவர்கள் பலரும் இருப்பார்கள். இந்நிலையில், நிஜமாகவே ஏழு தலைப் பாம்பு இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் கர்நாடக மக்கள்.

7head snake

கர்நாடக மாநிலம் கனகபுரா கிராமத்தில் 6  மாதங்களுக்கு முன்பு 7 தலைகளைக் கொண்ட பாம்பு ஒன்றின் தோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏழு தலை பாம்பின் தோல் கண்டெடுக்கப்பட்டதால், இந்த இடத்தில் ஏதேனும் விசேஷ சக்தி இருக்கக்கூடும் என்று நினைத்த கிராமத்து பொதுமக்கள், அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினார்கள். 6 மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் அந்த கோயிலின் அருகே 7 தலைகளைக் கொண்ட பாம்பின் தோலை அந்த கிராமத்து பொதுமக்கள் பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். கோயில் அருகே 10 அடி தூரத்தில் இந்த 7 தலை கொண்ட பாம்பின் தோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த செய்தி தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவத் தொடங்கியது. சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 7 தலைப் பாம்பின் தோலை காண ஆர்வத்துடன் அந்த பகுதியில் திரண்டனர்.