கர்நாடக அரசியலில் கலகம்! கவிழ்ந்தது ஜேடிஎஸ் ஆட்சி?

 

கர்நாடக அரசியலில் கலகம்! கவிழ்ந்தது ஜேடிஎஸ் ஆட்சி?

கர்நாட‌காவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 11 பேர்‌, தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாட‌காவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 11 பேர்‌, தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

225 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு 2008 -ல் தேர்தல் நடைபெற்றது. அப்போது  சபாநாயகர் தவிர‌ சரிபாதி எண்ணிக்கையான 112 + 1 என்ற அடிப்படையில் 113 உறுப்பினர்கள் இருந்தால் பெரும்பான்மை  என நிர்ணயிக்கப்பட்டது. எண்ணிக்கை அடிப்படையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதாவுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், கண்ணீருடன் பதவி விலகி‌னார் எடியூரப்பா. இதையடுத்து கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியமைத்தது. காங்கிரசின் 79, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37, பகுஜன் சமாஜ் கட்சி 1, சுயேச்சை 1 எனக் கூட்டணி பலம் 118 ஆக இருந்தது. 

இந்நிலையிக் விஜயநக‌ரம் தொகுதி எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சிங் கடந்த மாதம் ‌‌ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ராஜினாமா கடிதம் மீதான பரிசீலனை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 3 எம்எல்ஏக்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பாஜக நிர்வாகிகள் சொல்லி நாங்கல் இந்த முடிவு எடுக்கவில்லை என அந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். இந்த 12 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்  மதசார்பற்ற கூட்டணி ஆட்சி எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் கவிழலாம். இதற்கிடையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்கும்  எங்கள் கட்சியிலிருந்து எந்த உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என உறுதியளித்துள்ளார்.