கர்நாடகா முழுக்க நிரம்பி வழியும் மழை நீர்! 4 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்!

கர்நாடகா முழுக்க நிரம்பி வழியும் மழை நீர்! 4 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்!

தமிழகத்தில் தண்ணீரை ஒவ்வொரு வருஷமும் தருவதற்கு முரண்டு பிடிக்கும் கர்நாடகாவில், மாநிலம் முழுக்கவே மழை நீர் நிரம்பி வழிகிறது. வேறு வழியே இல்லாமல் காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட்டும், கர்நாடகாவில் உள்ள 4 மாவட்டங்களுக்கு மீண்டும்  மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் குடகு, ஷிமோகா, பெலகாவி, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

karnataka

ஏற்கனவே ஷிமோகாவில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பாதிப்பு இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாகரில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக கருதப்படும் ஜோக் நீர்வீழ்ச்சியி்ல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 
உடுப்பியில் கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

karnataka rain

ஹசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முழு கொள்ளளவை எட்டியிருக்கும் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்முறை மீண்டும் கர்நாடகாவில் கனமழை பெய்தால், அம்மாநிலத்தில் வெள்ளச்சேதம் பெருமளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.