கர்நாடகாவை முடிச்சுட்டாங்க.. அடுத்து நாம தானோ கலக்கத்தில் கமல் நாத்….

 

கர்நாடகாவை முடிச்சுட்டாங்க.. அடுத்து நாம தானோ கலக்கத்தில் கமல் நாத்….

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அடுத்து நம்ம ஆட்சியை பா.ஜ. கவிழ்த்து விடுமோ என்ற பயத்தில் அம்மாநில முதல்வர் கமல் நாத் உள்ளதாக தகவல்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பா.ஜ. 109 இடங்களிலும் இடம் பிடித்தது. இதனையடுத்து 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், எஸ்.பி. மற்றும் பி.எஸ்.பி. ஆகிய கட்சிகளை சோ்ந்த மொத்தம் 3 எம்.எல்.ஏ.க்களின் தயவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனாலும் காங்கிரசால் நிம்மதியாக ஆட்சியை நடத்த முடிகிறாதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மத்திய பிரதேச சட்டப்பேரவை

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு முடிவுக்கு வந்தது. அந்த கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனையடுத்து முதல்வர் குமாரசாமி தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என பா.ஜ. வலியுறுத்தியது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி கண்டார். இதனையடுத்து அம்மாநிலத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

பார்கவா

இந்நிலையில், எங்களது நம்பர் 1 மற்றும் நம்பர் 2 உத்தரவிட்டால், எங்களால் 24 மணி நேரத்துக்குள் இந்த அரசை கவிழ்க்க முடியும் என மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பா.ஜ. எம்.எல்.ஏ. பார்கவா பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பார்கவா கூறியதாவது: தற்போதைய கூட்டணி அரசு எந்தவொரு கருத்தியல் பொருந்தக்கூடிய தன்மை அல்லது கொள்கை அடிப்படையாக கொண்ட ஒரு கூட்டணி அல்ல. பேராசையால் உருவான கூட்டணி.

அவர்களின் தேவை பூர்த்தி செய்யப்படாத அன்று கூட்டணி  கவிழும். கர்நாடகாவை காட்டிலும் மத்திய பிரதேசத்தின் நிலைமை மோசமாக உள்ளது. இந்த அரசு எப்படி 7 மாதங்கள் ஆட்சியில் இருக்கிறது என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் எங்களது தலைமையின் உத்தரவை பின்பற்றுவோம். அவர்கள் இந்த அரசை கவிழ்க்க சொல்லவில்லை. என்று கூறினார்.

பா.ஜ. எம்.எல்.ஏ. பார்கவா பேச்சால் முதல்வர் கமல் நாத் கடும் கலக்கத்தில் உள்ளதாக தகவல். அதேசமயம்,  எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜ. கொண்டு வரட்டும் என கமல்நாத் கெத்தாக கூறியிருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.