கர்நாடகாவை குறிவைத்த மத்திய அரசு! வருகிறது தேசிய குடிமக்கள் பதிவு

 

கர்நாடகாவை குறிவைத்த மத்திய அரசு! வருகிறது தேசிய குடிமக்கள் பதிவு

அசாமை தொடர்ந்து கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவு கொண்டு வரப்பட்டது. இதனால் அசாமில் லட்சக்கணக்கான மக்கள் குடியுரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த விவகாரம் ஒரு பக்கம் அனலை கக்கி கொண்டிருந்தாலும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதேசமயம்  இதற்கு சில எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

பஸ்வராஜ் பொம்மை

ஆனாலும் தேசிய குடிமக்கள் பதிவை நாடு முழுவதும் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தற்போது அசாமை தொடர்ந்து கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவை கொண்டு வருவதற்கான பணிகள் ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும், சட்டவிரோதமாக கர்நாடகாவில் குடியேறியவர்களை கண்டுபிடித்து காவலில் வைப்பதற்காக பெங்களூருவிலிருந்து 35 கி.மீட்டர் தொலைவில் உள்ள நல்மங்களா தாலுாகவில் வெளிநாட்டவர்கள் காவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை கர்நாடாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அமித் ஷா

கர்நாடகா உள்துறை அமைச்சர் பஜ்வராஜ் பொம்மை தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறை தொடர்பாக கூறுகையில், இங்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. சாத்தியமான அனைத்து தகவல்களையும் திரட்டி வருகிறோம். இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்து செல்வோம் என தெரிவித்தார்.

என்.ஆர்.சி.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தும் நோக்கில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவரை காவலில் வைக்க ஒரு காவல் மையத்தை எவ்வளவு விரைவாக அமைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செய்யும்படி கடந்த ஜூலையில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.