கர்நாடகாவில் மீண்டும் குழப்பம்! 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்!!

கர்நாடகாவில் மீண்டும் குழப்பம்! 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்!!

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், மேலும் 14‌ எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களில் ஏற்கனவே 3 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது குறிப்பிடதக்கது. 

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், மேலும் 14‌ எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களில் ஏற்கனவே 3 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது குறிப்பிடதக்கது. 

கர்நாடகா சட்டமன்றம் மொத்த உறுப்பினர்களின் ‌எண்ணிக்கை 224. சபாநாயகர் ரமேஷ்குமார் 17 எம்.எல்‌ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். அதன்படி தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 207ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 105. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ஆக உள்ளது.

இதில் சபாநாயகரும் அடங்குவார். இவர்கள் தவிர்த்து ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஒருவரும் உள்ளனர். இதில் சுயேச்சை உறுப்பினரின் ஆதரவு பாரதிய ஜனதாவுக்கு கிடைப்பதால் அக்கட்சியின் பலம் 106ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மையை நிரூபிக்க, 104 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எடியூரப்பா அரசுக்‌‌கு 106 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்