கர்நாடகாவில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி – ஊரடங்கு 4.0 வழிமுறைகள்

 

கர்நாடகாவில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி – ஊரடங்கு 4.0 வழிமுறைகள்

கர்நாடக மாநிலத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வழிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வழிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வழிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா அனுமதி அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று கூறினார். ஆனால் மற்ற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளில் தளர்வு இருக்கும் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுக்க முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ttn

மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மற்றும் மால்கள் தவிர மற்ற கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அம்மாநில மக்கள் கொஞ்சம் மகிழ்ச்சியாக உள்ளனர்.