கர்நாடகாவில் நூதன முறையில் மணல் பாம்பு கடத்திய இருவர் கைது

 

கர்நாடகாவில் நூதன முறையில் மணல் பாம்பு கடத்திய இருவர் கைது

கர்நாடகாவில் நூதன முறையில் மணல் பாம்பு கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு: கர்நாடகாவில் நூதன முறையில் மணல் பாம்பு கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் நூதன முறையில் மணல் பாம்பு கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் பாம்புகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-இன் அட்டவணை 4-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. ஊர்வன இனங்கள் உலக சந்தையில் பெரும் தேவை உள்ளது. பெரும்பாலும் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம்வரை ஆகும். இந்தியாவில் கவர்ச்சியான மற்றும் ஆபத்தான விலங்குகளில் வர்த்தகம் செய்வதற்கு கடுமையான தடை இருந்தபோதிலும் ஊரடங்கு நிலையில்கூட, நாடு முழுவதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், இரண்டு தலை கொண்ட மணல் பாம்பு வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு சிறுவன் உட்பட இருவரை கர்நாடக போலீசாரின் மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளனர்.

ttn

இந்த வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக டன்சோ உணவு விநியோக நிறுவனத்தின் டெலிவரி பையை அந்த இருவரும் பயன்படுத்தி உள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி முகமது ரிஸ்வான் (வயது 26) மற்றும் அசார் கான் (வயது 27) ஆகியோர் டெலிவரி பையன்களாக ஆள்மாறாட்டம் செய்து உணவை எடுத்துச் செல்வதாக கூறி மணல் பாம்புகளை தங்கள் டெலிவரி பைகளில் எடுத்து சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து ஒரு ஸ்கூட்டர் மற்றும் மூன்று மொபைல் போன்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மணல் பாம்புகள் சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு போன்ற நாடுகளில் புற்றுநோய் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தோல் தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர மருந்துகள், பாலுணர்வுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சில பகுதிகளில் சூனியம் சடங்குகளிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன.