கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ-க்களின் தலைவிதி… புதன் கிழமை முடிவு செய்கிறது உச்ச நீதிமன்றம்!

 

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ-க்களின் தலைவிதி… புதன் கிழமை முடிவு செய்கிறது உச்ச நீதிமன்றம்!

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றனர். இதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றனர். இதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்ததும், ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ-க்களின் பதவிளை பறித்து அப்போதைய சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் நடப்பு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் வரை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இதை எதிர்த்து 17 எம்.எல்.ஏ-க்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

karnataka

இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கண்ணா மற்றும் கிருஷ்ணா முராரி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.இந்த நிலையில், கர்நாடகாவில் காலியாக உள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளில் 15-க்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அணுகியுள்ளனர். இந்த வழக்கில் புதன் கிழமை தீர்ப்பு வெளியாக உள்ளது.
தற்போது இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வது இன்று (திங்கட்கிழமை நவம்பர் 11) தொடங்கிவிட்டது. நவம்பர் 18ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் போட்டியிடலாம் என்று தீர்ப்பு வந்தால் அவர்கள் மீண்டும் போட்டியிட முடியும். இதனால் தங்களின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.