கர்நாடகாவில் சர்வ சாதரணமாக நடக்கும் ஆட்சி கவிழ்ப்பு! இதுதான் சாபக்கேடு…! நடந்தது என்ன?

கர்நாடகாவில் சர்வ சாதரணமாக நடக்கும் ஆட்சி கவிழ்ப்பு! இதுதான் சாபக்கேடு…! நடந்தது என்ன?

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு என்பது அடிக்கடி நடக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த மாநிலம் ‌உருவானதற்குப் பிறகு 3 முதலமைச்சர்கள் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ‌ஆட்சியை நிறைவு செய்துள்ளனர்

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு என்பது அடிக்கடி நடக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த மாநிலம் ‌உருவானதற்குப் பிறகு 3 முதலமைச்சர்கள் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ‌ஆட்சியை நிறைவு செய்துள்ளனர்

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு 14 மாதங்களில் கவிழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் 1956ஆம் ஆண்டு உருவானது. அன்று முதல் இன்று வரை 25 பேர் கர்நாடக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளனர். அவர்களில் மூவர் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்திருக்கின்றனர். நிஜலிங்கப்பா 1962 முதல் 67 வரை முதலமைச்சராக இருந்துள்ளார்.

Karnataka

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ் 1972 ஆம் ஆண்டு மார்ச் முதல் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா 2013 முதல் 2018 வரை முதலமைச்சர் பதவியில் முழுமையாக இருந்தார்.  யாருக்கும் பெரு‌ம்பான்மை கிடைக்காததால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து அமைக்கப்படும் ஆட்சிகள் கர்நாடகாவில் ஒருமுறை கூட முழுமையாக நிறைவு செய்யவில்லை. அங்கு கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில், நான்கில் கூட்டணி ஆட்சியே அமைந்தது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 10 முதலமைச்சர்களைக் கண்டுள்ளது கர்நாடகம். இதில் இரண்டு முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது.