கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இளைஞரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கும்பல்

 

கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இளைஞரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கும்பல்

கர்நாடகாவில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய இளைஞரை பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் அந்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேசமயம் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுமக்களில் ஒரு பிரிவினரும், பா.ஜ.க.வும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கூட்டங்களும், செயல்விளக்கங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தனது வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த  31 வயது இளைஞர் ஒருவரை பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி விட்டு சென்று விட்டது. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதால் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.