கர்நாடகாவில் இருந்துவந்து பெரியாரைப் பற்றி பேசும் தைரியம் எப்படி வந்தது? – ரஜினியை சீண்டும் சசிகலாவின் தம்பி

கர்நாடகாவில் இருந்துவந்து பெரியாரைப் பற்றி பேசும் தைரியம் எப்படி வந்தது? – ரஜினியை சீண்டும் சசிகலாவின் தம்பி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் கர்நாடகாவில் இருந்து வந்துவிட்டு பெரியாரைப் பற்றி பேச ரஜினிக்கு எப்படி தைரியம் வந்தது என்று சசிகலாவின் தம்பி திவாகரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

periyar

சசிகலாவின் தம்பி திவாகரன். இவர் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட தகராறில் தனியாக கட்சி ஆரம்பித்து பெயருக்கு அதை நடத்தி வருகிறார். இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க தலைவர்களுள் ஒருவருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, “தமிழகத்தின் நிலை இன்று மிக மோசமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்தப்படுகின்றனர். கர்நாடகத்திலிருந்து வந்த ஒருவர் தந்தை பெரியாரைப் பற்றி பேசும் அளவுக்கு துணிச்சல் வந்துள்ளது. திராவிடத் தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

divakaran-with-dinakaran

தமிழ், தமிழகம் தான் நமக்கு முதலில் முக்கியம். அதை காப்பாற்றுபவர்களுக்கு நாம் பின்பலமாக நிற்க வேண்டும். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதைக் காக்கும் ஒரே சக்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 85 சதவிகித வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பாலும் அது ஆளுங்கட்சியால் தட்டி பறிக்கப்பட்டுள்ளது. அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்கமாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன்” என்றார்.