கர்நாடகாவில் இன்று 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

 

கர்நாடகாவில் இன்று 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

கா்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். இதனால் பா.ஜ.க. கட்சியை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது. அதேசமயம், எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை நிருபிக்க வேண்டிய நிலையில் உள்ளன.

கர்நாடகா வாக்காளர்கள்

காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. டிசம்பர் 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. இதனையடுத்து வேட்பு மனு தாக்கல், பிரச்சாரம் என அரசியல் பிசியாக இருந்தன.

பி.எஸ். எடியூரப்பா

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 37.78 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்குகளை பதிவு செய்யவேண்டும். 80 முதல் 85 சதவீத வாக்காளர்கள் வந்து வாக்களித்தால்தான் ஜனநாயகத்துக்கு அர்த்தம் இருக்கும். இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.