கர்நாடகத்தில் வெங்காயத்தால் கோடீஸ்வரர் ஆன விவசாயி! 

கர்நாடகத்தில் வெங்காயத்தால் கோடீஸ்வரர் ஆன விவசாயி! 

வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வெங்காயத்தை வைத்து ஒரு விவசாயி கோடீஸ்வரர் ஆகியுள்ளார் என்று தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
வெங்காயம் விலை கிலோ 200, 250க்கு சென்றுவிட்டது. விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காமல், இடைத் தரகர்கள் சம்பாதிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெங்காய விலை உயர்வை சமாளிக்க வெளிநாட்டு வெங்காயத்தை இந்திய அரசு இறக்குமதி செய்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்த விவசாயி மல்லிகார்ஜுனா வெங்காயம் விற்பனையில் கோடியை சம்பாதித்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

farmer

இது குறித்து அவர் கூறுகையில், “2004ம் ஆண்டு முதல் வெங்காயம் சாகுபடி செய்து வருகிறேன். சில வருடங்கள் லாபம் கிடைக்கும். சில வருடங்கள் கடன்தான் மிஞ்சும். இந்த ஆண்டு ரூ.15 லட்சம் முதலீடு செய்து வெங்காயம் சாகுபடி செய்தேன். அறுவடைக் காலத்தில் வெங்காயத்தின் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. வழக்கமாக ரூ.5 முதல் 10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், ரூ.1 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது. 
இந்த ஆண்டு 240 டன் வெங்காயம் அறுவடை செய்தோம். நல்ல விளைக்கு விற்றோம். ஒரு கோடிக்கு ரூபாய்க்கும் அதிகமாக லாபம் கிடைத்துள்ளது. மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துத்தான் வெங்காயம் சாகுபடி செய்தேன். நல்லவேளையாக லாபம் கிடைத்துவிட்டது. இல்லை என்றால் மிகப்பெரிய கடன் சுமையில் மாட்டியிருப்பேன். 

onion

இப்போது கிடைத்த லாபத்தைக் கொண்டு என்னுடைய கடன் அனைத்தையும் அடைத்துவிட்டேன். வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். கூடுதலாக விவசாய நிலம் வாங்க முடியுமா என்றும் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். விலை உயர்வின் உண்மையான பலனைக் கஷ்டப்பட்டு விளைவித்த விவசாயி அனுபவித்திருக்கிறார் என்பதே மிகப்பெரிய சந்தோஷம்தான்!