கர்தாபூர் வழித்தடத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி: பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய யாத்ரீகர்கள்

 

கர்தாபூர் வழித்தடத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி: பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய யாத்ரீகர்கள்

கர்தாபூர் வழித்தடத்தை இந்திய பகுதியில் பிரதமர் நேரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து கர்தாபூர் குருத்வாரா செல்லும் முதல் யாத்ரீகர்கள் அணி பாகிஸ்தானுக்குள் சென்றது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து விட்டது. 

கர்தாபூர் குருத்வாரா

இன்று கர்தாபூர் வழித்தடம் தொடக்க விழா இருநாடுகளில் நடைபெறுகிறது. முதலில் இந்திய பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி குருதாஸ்பூரில் தேரா பாபா நானக்கில் கர்தராபூர் வழித்தடத்தின் ஒருங்கிணைந்த செக்போஸ்ட் அல்லது பயணிகள் முனையத்தை தொடங்கி வைத்தார். 

பிரதமர் மோடி

இந்திய பகுதியில் கர்தாபூர் வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைத்தபிறகு, கர்தாபூர் குருத்வாராவுக்கும் செல்லும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட முதல் கட்ட பயணத்தை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் கர்தார்பூர் வழித்தடம் வாயிலாக பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் பகுதிக்குள் சென்றனர். பாகிஸ்தானில் கர்தாபூர் வழித்தடத்தை தொடங்கி வைக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் சுமார் 4 மணி அளவில்தான் அங்கு வந்தார்