கரோனா வைரஸ்… மாஸ்க்கால் ஏற்பட்ட தடங்கள்… மனிதம் காத்த மாமனிதிகள்!

கரோனா வைரஸ்… மாஸ்க்கால் ஏற்பட்ட தடங்கள்… மனிதம் காத்த மாமனிதிகள்!

கரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து வாடி வருகின்றனர். அங்கு நடக்கும் சில நிகழ்ச்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போர் நெஞ்சங்களை உருக்கும் வண்ணம் அமைந்தன. கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க மொட்டையடித்துக்கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தியாகங்களை உலகமே போற்றியது. 

சீனாவிலிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய கரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கமுடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. 

china-doctors-90

கரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து வாடி வருகின்றனர். அங்கு நடக்கும் சில நிகழ்ச்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போர் நெஞ்சங்களை உருக்கும் வண்ணம் அமைந்தன. கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க மொட்டையடித்துக்கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தியாகங்களை உலகமே போற்றியது. 

china-nurses

சீன மருத்துவர்கள் நோயாளிகளைக்  குணப்படுத்துவதற்காக தங்கள் உயிரையும் துச்சமாக எண்ணி களத்தில் இறங்கி பணிசெய்து வருகின்றனர். திரும்பி உயிருடன் வருவோமா? என்று தெரியாத இந்த மரண பயணதிற்கு தயாராகிய மருத்துவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பிரியா விடைபெற்றுச் சென்ற காட்சிகள் கண்ணீர் வரச் செய்தது. சீன மருத்துவர்கள் நாள் பொழுதும் தங்கள் முகங்களில் மாஸ்க் அணிந்துகொண்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதனால் அவர்கள் முகத்தில் மாஸ்கால் ஏற்பட்ட தடங்களை பார்க்கும் போது மனிதம் இன்னும் மரித்துபோகவில்லை என்று எண்ணும் அளவிற்கு அவர்களின் அர்ப்பணிப்பு நம்மை வியப்படையச் செய்கிறது.