கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரள அமிர்தானந்த மயி மடத்தில் பக்தர்கள் வருகை நிறுத்தம்

உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் 31 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்ற மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

Amritanandamayi ashram

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்தில் பக்தர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் ஏராளமான அளவில் வருகை தருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் வருகைக்கு மாதா அமிர்தானந்த மயி மடம் தடை விதித்துள்ளது.