கரோனா வைரஸ் பாதித்த 80 வயது தம்பதிகள்! ஐ.சி,யூ வில் கண்ணீருடன் பிரிவு! பார்ப்போரை துயரத்தில் ஆழ்த்தும் வீடியோ

 

கரோனா வைரஸ் பாதித்த 80 வயது தம்பதிகள்! ஐ.சி,யூ வில் கண்ணீருடன் பிரிவு! பார்ப்போரை துயரத்தில் ஆழ்த்தும் வீடியோ

சீனாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதிகள் தீவிர சிகிக்சைப் பிரிவில் ஒருவர்க்கொருவர் கண்ணீருடன் விடைபெற்றுக் கொள்ளும் காட்சி இணையத்தில் பரவி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

சீனாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதிகள் தீவிர சிகிக்சைப் பிரிவில் ஒருவர்க்கொருவர் கண்ணீருடன் விடைபெற்றுக் கொள்ளும் காட்சி இணையத்தில் பரவி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

china

இந்த வீடியோவை வெளியிட்ட நபர் “உண்மையான அன்புக்கு அர்த்தம் இதுதான். 80 வயது ஜோடி ஒருவருக்கொருவர் கனத்த இதயத்துடன் பிரியா விடைபெற்றுக்கொள்கின்றனர், இதுவே இவர்களின் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்” என்று குறிப்பிட்டுருந்தார்.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் தங்களின் வேதனைகளை பதிவு செய்து வருகின்றனர். உண்மையான காதலுக்கு விசுவாசமாக இருக்கும் இந்த தம்பதிகளை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது என்றும் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.