கரோனா பத்தி பேசுனா காசு கிடைக்காது யூட்யூப் அதிரடி அறிவிப்பு

கரோனா பத்தி பேசுனா காசு கிடைக்காது யூட்யூப் அதிரடி அறிவிப்பு

கரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பல நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

corona-89

இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான யூட்யூப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கிரியேட்டர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்ட வீடியோகளுக்கு விளம்பரம் வராத மாறி demonetize செய்யப்படுகிறது. இது யூடியூபில் வீடியோ போடும் பலரை பாதித்து வருவதாக கூறியுள்ளனர். 

youtube-89

இப்போது, யூடூப்பர்கள் தங்கள் விடீயோயோவில் கரோனா வைரஸ் பற்றி பேசியிருந்தால் அந்த வீடியோ demonetize செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அனைவரையும் அச்சுறுத்தும் கரோனா வைரஸ் சர்ச்சைக்குரிய தலைப்பாக கருதப்படுகிறது. எனவே கரோனா என்ற பெயரைக் கூட உங்கள் வீடியோக்களில் உச்சரித்து விடாதீர்கள். அப்புறம் துட்டு நஹி தான்!