கரூர் தொழிலதிபர் வீட்டில் தொடரும் ஐ.டி ரெய்டு : ரூ.435 கோடி வரி ஏய்ப்பு அம்பலம் !

 

கரூர் தொழிலதிபர் வீட்டில் தொடரும் ஐ.டி ரெய்டு : ரூ.435 கோடி வரி ஏய்ப்பு அம்பலம் !

கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசாமி கொசுவலை நிறுவனம் நடத்தி வருகிறார்.

கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசாமி கொசுவலை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், கடந்த 15 ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவசாமியின் வீடு, வெண்ணைமலை பகுதியில் உள்ள ஷோபிகா கொசுவலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

Sivasaami

சிவசாமியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில், கட்டுக் கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மொத்தமாக ரூ. 32 கோடியே 60 லட்சம் மற்றும் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

IT Raid

அதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் வருமான வரிகளைப் போலி ரசீது காட்டி ஏமாற்றி வருவதாகவும் பல ஆண்டுகளாக இது நடைபெற்று வருவதாகவும் சுமார் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், சிவகாமிக்குச் சொந்தமான இடங்களில் 4 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர்.