கரூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..ஒருவருக்கு பாதிப்பு உறுதி!

 

கரூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..ஒருவருக்கு பாதிப்பு உறுதி!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே ஒரு பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரும் குணமடைந்து வீடு திரும்பினா

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2300ஐ எட்டியுள்ளது. ஆனால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 181 பேரும் கொரோனா அச்சத்தில் 119 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் பிறந்த குழந்தை உட்பட முதியவர்கள் என அனைவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறப்பான சிகிச்சை காரணாமாக அரசு 276 பேர் குணமடைந்தனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 

ttn

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே ஒரு பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரும் குணமடைந்து வீடு திரும்பினார். அதனால், கொரோனா இல்லாத மாவட்டமாக கரூர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கரூரில் மீண்டும் கொரோனா வைரஸ் தலை தூக்கியுள்ளது. சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்த நபர் கடந்த 24 ஆம் தேதி கரூர் சென்றுள்ளார். தற்போது அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.