கருவில் பெண் குழந்தை… முத்தலாக் கூறிய கணவர் உள்பட ஏழு பேர் கைது!

 

கருவில் பெண் குழந்தை…  முத்தலாக் கூறிய கணவர் உள்பட ஏழு பேர் கைது!

கருவில் பெண் குழந்தை இருப்பதை தெரிந்து பெண்ணுக்கு முத்தலாக் கூறிய கணவர் உள்பட ஏழு பேரை பீகார் போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலம் முசாபர் நகரில் உள்ள சாப்ரா பகுதியைச் சார்ந்தவர் காலிப். இவருக்கும் ஃபர்சானா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

கருவில் பெண் குழந்தை இருப்பதை தெரிந்து பெண்ணுக்கு முத்தலாக் கூறிய கணவர் உள்பட ஏழு பேரை பீகார் போலீசார் கைது செய்தனர்.

muslim

பீகார் மாநிலம் முசாபர் நகரில் உள்ள சாப்ரா பகுதியைச் சார்ந்தவர் காலிப். இவருக்கும் ஃபர்சானா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், ஃபர்சானா மீண்டும் கர்ப்பமானார். தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று காலிப் கூறிவந்துள்ளார். இந்தநிலையில், திடீரென்று ஃபர்சானாவை அழைத்துக் கொண்டு ஒரு ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான ஸ்கேன் செய்யப்பட்டது. இதில், கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தது.

arrest

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவதே சட்ட விரோதம்…  அப்படி இருக்கும்போது அதை தெரிந்துகொண்டதுடன் அதைக் காரணம் காட்டி கருவை கலைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். குழந்தை வளர்ந்துவிட்டதால், கருக்கலைப்பு செய்வது சரியாக இருக்காது என்று மருத்துவர்களும் ஃபர்சானாவும் கூறியுள்ளனர். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற காலிப், மும்முறை தலாக் கூறி ஃபர்சானாவை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். 
இதனால் அதிர்ச்சியடைந்த ஃபர்சானா, காலீப் மீது முசாபர் நகர் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காலிப் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.